இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! |

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே ஆயிரம் கோடி வசூல் என்கிற மாபெரும் இலக்கை தாண்டிவிட்டது. தற்போது 1700 கோடி வசூலை தாண்டி உள்ளது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் புஷ்பா 2 படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இந்த படத்திற்கு வடமாநிலங்களுக்கு சென்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். தற்போது படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையிலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் இருக்கிறது.
அதேசமயம் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸ் ஆக வரும் தவான் நடித்த பேபி ஜான் என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள புகழ் பெற்ற ராஜ் மந்திர் என்கிற தியேட்டரில் புஷ்பா 2 காலைக்காட்சி படம் பார்க்க புக்கிங் செய்து வந்த ரசிகர்களை காட்சி ரத்தானதாக கூறி அதற்கு பதிலாக பேபி ஜான் படத்தை பாருங்கள் இன்று தியேட்டர் நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர். கூட்டம் குறைவாக இருந்ததால் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள் அந்தக் கட்டணத் தொகையை திருப்பித் தருவதற்கு பதிலாக பேபி ஜான் திரைப்படத்தை பார்க்க வற்புறுத்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
குறிப்பாக 20 நபர்கள் இருந்தாலே ஒரு காட்சியை ரத்து செய்யாமல் திரையிட வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆட்கள் நிறைய பேர் வந்தும் கூட புஷ்பா 2 காட்சியை ரத்து செய்தது பேபி ஜான் திரைப்படத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என ரசிகர்கள் பலர் கொந்தளித்து தியேட்டர் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனராம்.