மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளிவந்தால் அவற்றிற்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடத்துவது தென்னிந்திய அளவில் ஒரு வழக்கமாக இருந்து வந்தது. தமிழகத்தில் கடந்த வருடம் 'துணிவு' படத்தின் அதிகாலை காட்சியின் போது ரசிகர் ஒருவர் மரணம் அடைந்த பின்பு அதிகாலை காட்சிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அப்படியான காட்சிகள் நடந்து வருகிறது.
தெலங்கானாவில் 'புஷ்பா 2' பட வெளியீட்டின் போது ஒரு நாள் முன்னதாக பிரிமியர் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ஹைதராபாத்தில் ஒரு தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது மகன் படுகாயமடைந்து ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தால் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம் அது குறித்து சட்டமன்றத்தில் பேசிய ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுன் மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்தார்.
தெலங்கானாவில் இனி எந்தவிதமான சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதியில்லை என அம்மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதற்கு அங்குள்ள சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுபோல ஆந்திர மாநில அரசும் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திர முதல்வரும், துணை முதல்வரும் திரையுலகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அது குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் சிறப்புக் காட்சியாக காலை 9 மணிக்கு நடத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்கம் போல காலை காட்சிகள் எப்படி நடக்கிறதோ அப்படியே நடத்த வேண்டும். சினிமா, ரீல்ஸ் மோகம் ஆகியவற்றால் இளம் தலைமுறையினர் கெட்டுப் போகிறார்கள். முதல் நாள் வசூல் 100 கோடி வசூல் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பின்னர் சண்டை போடவும் செய்கிறார்கள். கூட்டத்தைப் பார்த்ததும் சினிமா ஹீரோக்களுக்கும் அரசியல் மோகமும் வந்துவிடுகிறது. எனவே, வார நாட்களில் எப்படியான காட்சிகள் நடக்கிறதோ அது போலவே புதிய படங்கள் வரும் போதும் காட்சிகளை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
பொங்கலுக்கு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதால் அதற்குள்ளாக தமிழக அரசு இது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.