ஹரா, அந்தகன் உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த வனிதா விஜயகுமார் அதையடுத்து டாக்டர் சீனிவாசனுக்கு ஜோடியாக பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதோடு, மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் ராபர்ட்டும் - வனிதாவும் ரொமான்ஸ் செய்வது போன்ற மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். திருமண வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. அந்த மோஷன் போஸ்டரை வனிதாவின் மகளான ஜோவிகாவும் பகிர்ந்துள்ளார்.