குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? |
நடிகர் ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளை இரண்டு தினங்களுக்கு முன்பு கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.
அவர்களுக்கு தனித்தனியாக நன்றி சொல்லி வருகிறார் ரஜினிகாந்த். அதே சமயம் மொத்தமா ஒரு நன்றிக் கடிதம் ஒன்றையும் நேற்று வெளியிட்டிருந்தார். அதில் முதலில் அரசியல் பிரபலங்களையும், அடுத்து சினிமா பிரபலங்களையும் தனித்தனியே குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யை அரசியல்வாதிகள் பட்டியலில் சேர்த்து, “அன்புத்தம்பி விஜய்” என்றும், அரசியல்வாதியாகவும் இருக்கும் நடிகர் கமல்ஹாசனை, “திரையுலகத்திலிருந்து நண்பர் கமல்ஹாசன்,” என்றும் குறிப்பிட்டுள்ளது கமல் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் ஏற்கெனவே சட்டசபைத் தேர்தலை சந்தித்தவர். ஆனால், கட்சி ஆரம்பித்து இன்னும் தேர்தலில் போட்டியிடாதவர் விஜய். அப்படியிருக்க, கமல்ஹாசனை நடிகராகவும், விஜய்யை அரசியல்வாதியாகவும் குறிப்பிட்டதற்கு ரஜினிக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புப் பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.
மேலும், கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லாத போது, ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு மட்டும் கமல்ஹாசன் வாழ்த்து சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளார்கள்.