துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
'அமரன்' படம் மூலம் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது சில ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு டாப் 5 இடத்தைப் பிடித்துவிட்டதாக வினியோகஸ்தர்களே தெரிவிக்கிறார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அவர் இருக்கிறார் என்கிறார்கள்.
'அமரன்' படம் தந்த வெற்றி, வசூலை அடுத்து தன்னுடைய அடுத்த படங்களுக்கான சம்பளத்தை அவர் அதிரடியாக உயர்த்திவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள 'புறநானூறு' படத்திற்காக 50 கோடி சம்பளம் என்றும், அடுத்து 'டான்' படத்தை இயக்கிய சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு 60 கோடி சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.
300 கோடி வரை அதிகபட்ச வியாபாரம் 100 கோடி மினிமம் கியாரண்டி வியாபாரம் என்று சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால் அவருடைய சம்பள உயர்வு சரியானதே என்பது கோலிவுட் தகவல்.