32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சென்னை:'' கடவுளே அஜித்தே என ரசிகர்கள் கோஷம் போடுவது என்னை கவலை அடைய செய்துள்ளது,'' என நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித் குமார் உள்ளார். இவரது ரசிகர்கள் சில சமயங்களில் நடந்து கொள்ளும் விதம் பலருக்கு தொந்தரவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு 2021ல் பிரதமர் மோடி சென்னை வந்த போது கூட 'வலிமை அப்டேட் வேண்டும்' என கூச்சலிட்டனர் அவரது ரசிகர்கள். அதே வருடம் சென்னையில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடந்த போதும் 'வலிமை அப்டேட்' என கூச்சல் போட்டனர். அதற்கடுத்து அஜித் நடித்த படங்களின் போதும் அடிக்கடி 'அப்டேட் அப்டேட்' எனக் கேட்டு எரிச்சலூட்டினர்.
கடந்த சில வாரங்களாக பல பொது இடங்களில் 'கடவுளே அஜித்தே' எனக் கூக்குரலிட்டு அடுத்த கட்ட எரிச்சலை ஆரம்பித்துள்ளார்கள். சில தியேட்டர்களில் ' கடவுளே அஜித்தே' என கோஷம் போட்டனர்.வேறு பல பொது நிகழ்வுகளிலும் இதே போன்று கோஷமிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகின.இதனையடுத்து அஜித் உடனடியாக அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என குரல் எழுந்தது.
இந்நிலையில், அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க.... அஜித்தே' என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! வாழு & வாழ விடு! இவ்வாறு அந்த அறிக்கையில் அஜித்குமார் கூறியுள்ளார்.