இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா-2. இந்த படம் டிசம்பர் 5ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பொறுப்பை சாம் சி.எஸ்க்கு புஷ்பா-2 படக் குழு வழங்கியது.
இந்நிலையில் அது குறித்து சாம் சி.எஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த பதிவில், புஷ்பா- 2 படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்திற்கு எனக்கு இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் ஆகியோருக்கு நன்றி. அல்லு அர்ஜுன் படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. எனது திரையுலக பயணத்தில் இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளும், கிளைமாக்ஸ்சிலும் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக அமைந்தது என்று தெரிவித்திருக்கிறார் சாம் சி.எஸ்.