ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ல் வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. கடந்த நான்கு வாரங்களுக்கும் மேலாக தியேட்டர்களில் இப்படம் பெரும் வரவேற்புடன் ஓடி வருகிறது. 320 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை 8 வாரங்களுக்குப் பிறகே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்பே படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால், 5 வார முடிவில் ஓடிடியில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள். பட வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி நிறுவனத்துடன் எந்தத் தேதியில் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அந்த ஒப்பந்தத்தை மீற வாய்ப்பில்லை என்பதால்தான் 5 வாரங்களில் வெளியிடுகிறார்கள், என்பது கோலிவுட் தகவல்.
மேலும், 'அமரன்' தற்போது அதிகத் தியேட்டர்களில் ஓடி வந்தாலும் குறைவான பார்வையாளர்களுடன்தான் ஓடி வருகிறது. டிசம்பர் 5ம் தேதி 'புஷ்பா 2' வருவதால் அதன்பின் தொடர வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள்.