ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆனால், பின்னணி இசையை அவர் செய்யவில்லை. அவருக்குப் பதிலாக, தமன், சாம் சிஎஸ், அஜனீஷ் லோகநாத் உள்ளிட்டவர்கள் செய்து வருகிறார்கள் என இரண்டு வாரங்களாக செய்திகள் வந்தது.
நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் பெயரைக் குறிப்பிட்டே தனது மனக் குமுறல்களை வெளிப்படையாகக் கொட்டினார் தேவி ஸ்ரீ பிரசாத். இருந்தாலும் படத்தின் பின்னணி இசையை யார் அமைக்கிறார்கள் என அன்று கூட மேடையில் தயாரிப்பாளர்கள் பேசவில்லை. இதனிடையே, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சற்று முன்பு அவருடைய எக்ஸ் தளத்தில் 'புஷ்பா 2' படத்தின் அல்லு அர்ஜுனின் போஸ்டர் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் படத்தில் பின்னணி இசையை அமைக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
ஏற்கெனவே, இசையமைப்பாளர் தமன், 'புஷ்பா 2' படத்தில் சில காட்சிகளுக்கு இசையமைக்கிறேன் என்று பேசியிருந்தார். மூன்றாவதாக வேறு யாரும் இசையமைக்கிறார்களா என்பது இனிமேல் தெரிய வரும்.