ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
இயக்குனர் சிவாவின் தம்பியும் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் இன்றைய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் நன்றாகவே பரிச்சயப்பட்ட நடிகருமான பாலா தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனது மூன்று திருமணங்கள் மற்றும் அவற்றிலிருந்து பெற்ற விவாகரத்து மூலம் கடந்த பல வருடங்களாகவே பரபரப்பு செய்திகளில் அடிபட்டு வந்தார். சமீபத்தில் சென்னையில் உள்ள தனது உறவு பெண்ணான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் பாலா. இந்த கோகிலா, பாலாவின் முதல் திருமணம் நடப்பதற்கு முன்பிருந்தே அவரை சிறுவயதில் இருந்து மனதார விரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாலா தான் கொச்சியில் இருந்து வேறு இடத்திற்கு மாறப்போவதாகவும் மன அமைதிக்காகவும் உடல் நிலைக்காகவும் தான் இந்த மாற்றம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது கொச்சியை விட்டு 35 கிலோமீட்டர் தள்ளி கோட்டயம் செல்லும் வழியில் இருக்கும் வைக்கம் நகரத்திற்கு குடி புகுந்துள்ளார் பாலா. அதுவும் நகரத்தில் அல்லாமல் அங்கு இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில் தான்.. சமீபத்தில் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு மனைவியுடன் சென்று தரிசனம் செய்த பாலா அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “திருமணம் முடிந்து என் மனைவியை சென்னையிலிருந்து கொச்சிக்கு அழைத்து வந்த போது அவளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. காரணம் கொச்சியில் எனக்கு இருக்கும் பாதுகாப்பற்ற தன்மை தான். இப்போது வைக்கமுக்கு இடம் மாறி உள்ளதால் அவள் ரொம்பவே நிம்மதியாக உணர்கிறாள். இந்த பகுதியில் உள்ள மக்களும் என்னிடம் தற்போது பழக ஆரம்பித்து உள்ளனர். இங்கே நான் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் கொண்டிருக்கிறேன். பல நோயாளிகளுக்கு உதவி கொண்டிருக்கிறேன். பலருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கிறேன். நாம் எந்த இடத்தில் கால் வைக்கிறோம் என்பது முக்கியமல்ல. அது நல்லா இடமாக இருக்க வேண்டும்.. அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.