லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இதில் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பை பெரும்பாலும் வெளிநாடுகளில் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென இப்படத்தை விட்டு தேவி ஸ்ரீ பிரசாத் வெளியேறியதாக தகவல்கள் பரவி வருகிறது. எந்த காரணத்தால் வெளியேறினார் என்பது குறித்து தெரியவில்லை. இப்போது தேவி ஸ்ரீ பிரசாந்த் வெளியேறியதால் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும், மறுபுறம் அனிருத் உடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.