நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தொடர்ந்து பல பிரபலங்களின் விவகாரத்து அதிகரித்து வருவதைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு, நேற்றிரவு திடீரென அறிவித்து அதிர்ச்சியடைய வைத்தார். அடுத்த சில மணிநேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் இருவரும் பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
ரஹ்மான் வெளியிட்ட பதிவில், ''திருமண வாழ்வில் 30 ஆண்டுகளை தொட்டுவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராமல் இப்படி ஒரு முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அதன் அர்த்தத்தை தேடுகிறோம். இதை நாங்கள் கடந்த செல்ல எங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை தரும் நண்பர்களின் அன்புக்கு நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.
அதிலும், அவருடைய பதிவின் முடிவில் #arrsairaabreakup என்ற ஹேஸ்டேக் உடன் முடித்திருந்தார். திரை பிரபலங்களின் விவாகரத்து பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து விட்டதாக ரசிகர்கள் கவலைப்பட்ட நேரத்தில், அந்த பிரிவு செய்தியிலும் ஹேஸ்டேக் பயன்படுத்தி இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
'ஏ.ஆர். ரஹ்மான் தனது பிரிவினை அறிவிப்பதற்காக ஹேஷ்டேக்கை உருவாக்கிய ஆண்டாக 2024 வரலாற்றில் இடம்பிடிக்கும்' என ஒரு பயனர் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். ஒரு சிலர், அவருடைய எக்ஸ் தளத்தை நிர்வகிப்பவர் இந்த பதிவை போட்டாரோ எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.