நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் மண்டேலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். அதன்பிறகு இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த மாவீரன் படம் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்றது.
மாவீரன் படத்திற்கு பிறகு அஸ்வின் ஹிந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆன கரண் ஜோஹர் தயாரிக்கின்றார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து நடிகர் விக்ரமை வைத்து தமிழில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதுதவிர பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பட வாய்ப்பும் வந்துள்ளது. இவற்றில் யாருடைய இயக்கத்தில் விக்ரம் முதலில் நடிப்பார் என இனிமேல் தெரியவரும்.