ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தாலும் சமீபகாலமாக தமிழில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார். ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் படங்களை தொடர்ந்து தமிழில் அடுத்து வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 69வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சமீபத்தில் சிவராஜ் குமார் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். அதேசமயம் கால்ஷீட்டை பொருத்து நான் நடிப்பது உறுதியாகும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது அளித்த பேட்டியில், "சில தினங்களுக்கு முன்பு வினோத்தை சந்தித்து விஜய் படத்தில் நடிப்பது சாத்தியமில்லை. விரைவில் நல்ல கதையுடன் வேறொரு படத்தில் சந்திப்போம் என்று கூறிவிட்டேன்" என தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார்".