23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள படம் 'வணங்கான்' . இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இன்று அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். இந்த தேதியில் தெலுங்கில் இருந்து கேம் சேஞ்சர் படம் திரைக்கு வருகிறது. தமிழிலிருந்து இன்னும் எந்தவொரு படமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.