ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தற்போது தி டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ்1960, மூக்குத்தி அம்மன்-2, டியர் ஸ்டூடண்ட்ஸ் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடிக்கும் 'ராக்காயி' என்ற புதிய படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஊருக்கு அப்பால் காட்டுப்பகுதியில் ஒரு ஓலை குடிசையில் குழந்தையுடன் வாழும் நயன்தாராவை ஒரு கூட்டம் ஆயுதங்கள் தீப்பந்தங்களுடன் முற்றுகையிடுகிறது. அப்போது அரிவாள், தொரட்டி போன்ற ஆயுதங்களுடன் அவர்களை நோக்கி ஆவேசமாக சீறி பாய்ந்து வெட்டி சாய்க்கிறார் நயன்தாரா. அதிரடியான கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படத்தை செந்தில் நல்லசாமி என்பவர் இயக்குகிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகிறது.