இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… | மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காளி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' |
பிரபல மலையாள இயக்குனரான பாசிலின் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும் தனது தனித்தன்மை வாய்ந்த நடிப்பால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் பஹத் பாசில். மலையாளத்தில் அறிமுகமாகி பத்து வருடங்களாக அங்கே மட்டுமே நடித்து வந்த பஹத் பாசில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் விக்ரம், மாமன்னன், சமீபத்தில் வெளியான வேட்டையன், அதேபோல தெலுங்கில் வில்லனாக நடித்த புஷ்பா உள்ளிட்ட நான்கு படங்களின் மூலமே தென்னிந்திய அளவில் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்று விட்டார்,
அது மட்டுமல்ல மலையாளத்திலும் வித்தியாசமான கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. அதில் ரங்கன் தாதா என்கிற ஒரு காமெடி கலந்த தாதா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் பஹத் பாசில். இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா கங்குவா என்கிற படத்தில் நடித்துள்ளார். வரும் நவம்பர் 14ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவிடம் ஒரு நேர்காணலில் போது போது நீங்கள் சமீபத்தில் வெளியான படங்களில் எந்த நடிகரின் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு சற்றும் யோசிக்காத சூர்யா, பஹத் பாசில் நடித்த ஆவேசம் படத்தில் பகத் பாசில் நடித்த இந்த ரங்கன் தாதா கதாபாத்திரத்தில் தான் அளிக்க விரும்புவதாக கூறிய ஆச்சரியம் அளித்துள்ளார். அது மட்டுமல்ல பஹத் பாசில் பற்றி அவர் கூறும்போது, “பஹத் பாசிலை போல வேறு எவரும் தங்களது படங்களின் மூலம் அவ்வளவு உற்சாகத்தை கொண்டு வருவார்களா என தெரியவில்லை. அவர் மிக அற்புதமான படங்களை பண்ணுகிறார். விதவிதமான படங்களில் நடித்து திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை உற்சாகமாக பொழுது போக்க செய்கிறார். அது மட்டுமல்ல தனக்கான எல்லைகளை உடைத்து மலையாள திரையுலகையும் அவர் இன்னும் பெரிய இடத்திற்கு அழைத்து செல்கிறார்” என்று பஹத் பாசில் மீதான தனது வியப்பை பாராட்டுக்களாக வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.