விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இருவரும் இன்று நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர். சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது கங்குவா பட புரொமோசன் நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது சூர்யா கூறுகையில், "நான் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் தான் ஜோதிகா கதாநாயகியாக அறிமுகமானார். எனக்கு தமிழ் தெரியும் ஆனாலும், வசனங்களைக் பேச தடுமாறி கொண்டிருந்தேன். ஜோதிகா முதல் படத்திலேயே வசனங்களை தடுமாறாமல் பேசினார். குறிப்பாக காக்க காக்க படத்தில் என்னை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கினார்" என நினைவு கூர்ந்தார் சூர்யா.