'பீனிக்ஸ், எமக்குத் தொழில் ரொமான்ஸ்' வெளியீடுகள் தள்ளிவைப்பு ஏன்? | ரகசியமாக 2வது திருமணம் செய்த இயக்குனர் கிரிஷ் | கங்குவாவுடன் மோதும் கிளாடியேட்டர் | மாளவிகா மேனனுக்கு 'போன் டார்ச்சர்' கொடுத்த இளைஞர் கைது | தமிழில் முதல் பான் இந்தியா வரவேற்பைப் பெறுமா 'கங்குவா' | பிளாஷ்பேக்: முதன் முதலில் காடுகளில் படமான 'வனராஜ கார்ஸன்' | விஜய்சேதுபதி மகன் பட வெளியீடு தள்ளிவைப்பு | பிளாஷ்பேக்: ஒரே நடிகைக்கு 150 பாடல்கள் பாடிய பி.சுசீலா | ரங்கன் தாதா கதாபத்திரத்தில் நடிக்க விரும்பும் சூர்யா | மோகன்லாலுக்கே தெரியாத அவரது செல்லப்பெயரை கூறிய மனைவி |
ஒரு காலத்தில் ஆண்டுக்கு ஒரு ஐயப்பன் படங்களாவது வெளிவரும். ஐயப்ப விரத காலத்தில் வெளிவந்து வெற்றியும் பெற்று விடும். அப்படி ஒரு படம்தான் 'சரணம் ஐயப்பா'. தசரதன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் மனோரமாவின் மகன் பூபதி, ராதாவி, ஜெயபாரதி, விஜயன், ஜெய்சங்கர், மனோரமா, சரத்பாபு, சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார்.
1980ல் வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை இயக்கிய தசரன் 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் கமல்ஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இதனால் நட்புக்காக இந்த படத்தில் நடித்ததுடன் 'அண்ணா வாடா தம்பி வாடா' என்ற பாடலையும் பாடிக் கொடுத்தார் கமல். படம் தயாரானவுடனேயே தமிழ்நாடு முழுக்க விற்பனையாகி விட்டது. படம் 32 நாட்களில் படமாக்கப்பட்டது.
படத்தின் பூஜையின்போதே இயக்குனர் தசரதன் படம் வெற்றி பெற்றால் சபரிமலைக்கு வீட்டில் இருந்தே பாதயாத்திரையாக வருவதாக வேண்டுதல் செய்தார். அதன்பிடி எல்டாம்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து பாதயாத்திரையாக சபரிமலை சென்றார். படம் தயாரான அதே 32 நாட்களாக 520 கிலோ மீட்டர் நடந்தே பாத யாத்திரை செய்து சபரிமலையில் வழிபட்டு திரும்பினார்.