பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். வருகிற 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, கைதி- 2 படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டார். அவர் கூறும் போது, 2025ம் ஆண்டில் கைதி படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குகிறது. இந்த படத்தில் டில்லியும், ரோலக்ஸ்சும் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறார்கள். அதனால் அந்த படம் எல்சியு படம் என்றும், சூர்யாவும் கார்த்தியும் இணைய போகிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. அதனால் தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அப்படத்தை முடித்ததும் கைதி- 2 படத்தை தொடங்கப் போகிறார் என்பது தெரியவந்துள்ளது.