அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்ய லக்ஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், டில்லி, பாண்டிச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் 120 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தி சமீபத்தில் நிறைவு பெற்றது. ஏற்கனவே இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியது. தற்போது இந்த படத்தை 2025ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டு வாரத்தை குறிவைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.