அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மர்ம தேசம், ருத்ரவீணை, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட தொடர்கள், அனந்தபுரத்து வீடு என்ற படம் மூலம் புகழ்பெற்ற நாகா இயக்கி உள்ள வெப் தொடர் 'ஐந்தாம் வேதம்'. அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ள இந்த மித்தாலஜி தொடரில், சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் ஜீ 5 தளத்தில் வருகிற 25ம் தேதி வெளியாகிறது.
நான்கு வேதங்கள் இருக்கிறது. 5வது வேதம் ஒன்று இருக்கிறது. அது சிவன் கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் அது வெளிவரும் என்கிற ஒரு கதை உண்டு. அதை மையப்படுத்தி 5ம் வேதத்தை பலர் தேடிச் செல்வது மாதிரியான கதை. 5ம் வேதத்திற்கும் இன்றைய ஏஐ தொழில்நுட்பத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு என்பது மாதிரியான விஷயத்தை சேர்த்து சொல்லும் தொடர்.
இந்த வெப் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு சாய் தன்ஷிகா பேசியதாவது : எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால் எல்லாருமே எங்க போனாலும் என்னை கேட்டது என்ன நீங்க தமிழ் மறந்துட்டீங்களா? தமிழ்ல படம் பண்ணலையா? என்றுதான். அப்போதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனால் பண்ணினா மனசுக்கு திருப்தியான படம் மட்டும்தான் பண்ண வேண்டும் என்று மனசுக்குள்ள எப்பவுமே ஓடிக்கிட்டே இருக்கும். அந்த காத்திருப்பால்தான், அற்புதமான டீமோட வந்தது நான் நிக்கிறேன். நாலு வேதம் இருப்பது தெரியும், ஐந்தாவது வேதம் இருந்தால் எப்படி இருக்கும் அதுக்குள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கும் என்பதுதான் இந்த தொடரின் கதை.
எல்லா கால கட்டத்துலேயும் நம்மை ஊக்கப்படுத்த வழிகாட்ட ஒருவர் வேண்டும். எனக்கு அப்படி நிறைய இயக்குனர்கள் கிடைத்தார்கள், அப்போது ஜனநாதன் சார், இப்போது நாகா சார். இந்த தொடரில் புராண கதையும் இருக்கிறது, நவீன விஞ்ஞான வளர்ச்சியான ஏஐ தொழில்நுட்பம் பற்றியும் இருக்கு. நிச்சயமாக இது எல்லோருக்கும் பிடித்த தொடராக இருக்கும். நீண்ட நாட்கள் நிறைய கஷ்டப்பட்டு உருவான தொடர் இது. எங்கள் உழைப்பு நிச்சயம் பேசப்படும். என்றார்.