பாலியல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை: மஞ்சு வாரியர் வழக்கு தள்ளுபடி | 10 ஆயிரம் தியேட்டர்களில் 'கங்குவா' ரிலீஸ்? | ஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் நாயகியான ஓவியா | பாடம் கற்றுத் தந்த பிச்சைக்காரன் | தமிழில் அறிமுகமாகும் கேரள மாடல் | பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் | தண்டேல் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 'ராமாயணா' - 2026 தீபாவளி வெளியீடு | ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்? | சிவகார்த்திகேயன் 24வது படத்தில் இணைந்த அமரன் பட பிரபலம் |
சமூக படங்கள் வந்த பிறகு காதல் படங்களும் அதை தொடர்ந்து வரத் தொடங்கின. ஆனால் காதலர்கள் தூய தமிழிலும், தள்ளி நின்று கொண்டும் பேசிக் கொண்டிருந்தனர். நாயகனும், நாயகியும் அருகில் நெருங்கி வந்தாலே ஸ்கிரீன் கொண்டோ, பூச்செடி கொண்டோ மறைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியான காலத்தில்தான் தியாராஜ பாகவதர் நடித்த 'அம்பிகாபதி' இந்த பழமைகளை உடைத்தெறிந்தது. அதனை செய்தவர் அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன்.
உலக புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ ஜூலியட்' காதல் கதையை மனதில் வைத்து இந்த படத்தை இயக்கினார் டங்கன். அம்பிகாபதிக்கும், அமராவதிக்குமான காவிய காதல் தான் படம். அம்பிகாபதியாக எம்.கே. தியாகராஜ பாகவதர், அமராவதியாக எம்.ஆர்.சந்தானலட்சுமி, கம்பராக செருகளத்தூர் சாமா, குலோத்துங்கச் சோழனாக பி.பி.ரங்காச்சாரி, ருத்ரசேனனாக டி.எஸ்.பாலையா ஆகியோர் நடித்தனர். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் காமெடி போர்ஷனில் நடித்தனர். படத்தில் டி.எஸ்.பாலையா வில்லன். அவருக்கும் பாகவதருக்கும் வாள் சண்டை அந்த காலத்தில் பிரபலம்.
பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதி, இசை அமைத்திருந்தார். பின்னணி இசையை வங்காளத்தைச் சேர்ந்த கே.சி.டே அமைத்தார். சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் கோல்கட்டா ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பெனியில் உருவாக்கப்பட்டது.
காதல் காட்சிகளை நெருக்கமாக வைத்தார் டங்கன். குறிப்பாக நாயகனும், நாயகியும் கன்னத்தோடு கன்னம் உரசிக்கொள்ளும் காட்சிகள் அன்றைய இளம் ரசிகர்களை தியேட்டருக்கு அள்ளிக் கொண்டு சென்றது. படம் வசூலை குவித்தது ஒரு பக்கம், டங்கன் அமெரிக்க கலாச்சாரத்தை இந்தியாவில் திணிக்கிறார் என்கிற விமர்சனம் எழுந்தது இன்னொரு பக்கம்.
முதன் முதலாக இசை அமைப்பாளர், பாடலாசிரியர், வசனகர்த்தா ஆகியோரின் பெயர்கள் இந்த படத்தில்தான் டைட்டில் கார்டில் போடப்பட்டது. தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டார் ஆக்கிய படங்களில் இது முக்கியமானது.