சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாகியுள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகுவதால் இதன் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற அக்டோபர் 18ம் தேதி அன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியான சாய்ராம் கல்லூரியில் நடைபெறுகிறது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே அமரன் படத்தின் இரண்டாவது பாடலாக 'வெண்ணிலவு சாரல்' தற்போது வெளியாகி இருக்கிறது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கனவே 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
ராணுவ அதிகாரிகளுக்கு முதல் காட்சி
இத்திரைப்படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கதையை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். இதனை நேர்த்தியான முறையில் படமாக்க பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் பகுதிகளில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் தயாரான உடன் காஷ்மீரில் உள்ள முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு அமரன் படத்தை சிறப்பு காட்சி ஒன்றை திரையிடுகின்றனர். அவர்களின் புரிதலுக்காக அமரன் படத்தை ஹிந்தி பதிப்பில் அல்லது ஆங்கில சப்டைட்டில் உடன் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.