பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி | பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு |

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'கங்குவா' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யா உடன் இணைந்து திஷா பதானி, பாபி டியோல் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இப்படம் வருகின்ற நவம்பர் 14ம் தேதி அன்று வெளியாகிறது. இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் எக்ஸ் வலைத்தள ஸ்பேசில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, "கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இங்கிலீஷ், சைனீஸ் மற்றும் ஜப்பானிஷ் என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. மேலும், இந்த 10 மொழிகளிலும் சூர்யா குரல் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டப்பிங் செய்யப்படுகிறது," எனத் தெரிவித்தார்.