அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சினிமாவில் நடிப்பது வேறு அரசியலில் நடிப்பது வேறு. நடிகர் விஜய் தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்று விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டன.
கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும் ஜோசப் விஜய், தேவைப்பட்டால் நெற்றியில் திருநீறு, குங்குமம் ஆகியவற்றை இட்டுக் கொண்டு தன்னை இந்து மத ஆர்வலர் என்று காட்டிக் கொள்வார். ஆனால், சமீபத்தில் ஈவெ ராமசாமியின் பிறந்தநாளன்று சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தார். மேலும், சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
ஆனால், இன்று விஜய் சார்பாக இரண்டு பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன. ஒன்று அவரது அரசியல் கட்சி மாநாட்டிற்காக நடைபெற்ற சிறப்பு பூஜை, மற்றொன்று அவரது கடைசி படமான விஜய் 69 படத்திற்கான பூஜை. தன்னை ஒரு நாத்திகவாதியாகவும், ஆத்திகவாதியாகவும் மாறி மாறி காட்டிக் கொள்ளும் விஜய் சார்பில் இன்று இரண்டு பூஜைகள் நடத்தப்பட்டது ஏன் என பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.