மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
விஜய் நடிப்பில் சமீபத்தில் 'தி கோட்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து வினோத்தின் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு பயணிக்க உள்ளார். இதனால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த வாரத்தில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை இன்று(அக்.,1) முதல் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஹிந்தி நடிகர் பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நடிகரும் இயக்குனருமான கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக வரிசையாக அப்டேட்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது நடிகர் நரைனும் இணைந்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர். நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.