ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் வேட்டையன். அவருடன் அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்தவாரம் அக்., 10ம் தேதி படம் வெளியாகிறது. ஏற்கனவே படத்தின் இருபாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இன்று(அக்., 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு படத்தின் டிரைலரை சில நிமிட தாமத்திற்கு பின் வெளியிட்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு ஊர்களில் நடக்கும் போராட்டங்களுடன் டிரைலர் துவங்கிறது. அதில் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்யனும் என்ற குரல் ஒலிக்கிறது. இந்த விவகாரத்தால் போலீஸிற்கு பெரும் பிரச்னை வர அதற்கு காரணமானவரை என்கவுன்டர் செய்யும் பொறுப்பு ரஜினிக்கு வருகிறது. இதன் பின்னணியில் நடக்கும் விஷயங்களாக இந்த டிரைலர் விவரிக்கிறது. 2.39 நிமிடம் ஓடக்கூடிய டிரைலர் ரஜினி அமைதியாக, அதேசமயம் ஹீரோயிசம் கலந்த விவேகமான போலீசாக நடித்துள்ளார். அமிதாப், ராணா, பஹத் பாசில் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் டிரைலரில் ஆங்காங்கே வந்து போகின்றனர்.
‛‛தேவையில்லை, ஒருவாரம் ரொம்ப அதிகம் மூணே நாளில் டிபார்ட்மென்ட்டிற்கு நல்ல பெயர் வரும். குற்றங்கள் தொற்று நோய் மாதிரி அதை வளர விடக்கூடாது. அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியாக இருப்பதை விட அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்ல. நீங்க என்னை எந்த போஸ்டுக்கு தூக்கி அடிச்சாலும் நான் அதே போலீஸ்காரன் தான். என்கிட்ட இருந்து அவனை யாராலும் காப்பாத்த முடியாது'' போன்ற ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள் மற்றும் அவரின் அலட்டல் இல்லாத ஆக்ஷன் காட்சிகள் கவனம் ஈர்த்துள்ளன.
வேட்டையன் படம் உலகம் முழுக்க அக்., 10ல் வெளியாகிறது. வேட்டையன் வசூல் வேட்டையை தருவாரா என்பது அடுத்தவாரம் தெரிந்துவிடும்.