விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
விஜய் நடிப்பில் சமீபத்தில் ‛தி கோட்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து வினோத்தின் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு பயணிக்க உள்ளார். இதனால் அரசியல் சார்ந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஓரிரு நாளில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை இன்று(அக்., 1) முதல் வெளியிட துவங்கி உள்ளனர். முதலாவதாக ஹிந்தி நடிகர் பாபி தியோல் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இவர் படத்தில் வில்லனாக நடிப்பார் என தெரிகிறது. ஏற்கனவே சூர்யா உடன் கங்குவா படத்தில் நடித்துள்ள இவர் அடுத்து விஜய்யின் படத்தில் இணைந்துள்ளார்.