கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
'பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரவுபதி, பகாசூரன்' ஆகிய படங்களை இயக்கியவர் மோகன். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். சமீபத்தில், பழநி கோவிலில் வினியோகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்து கொடுப்பதாக கூறி சர்ச்சையே ஏற்படுத்தியிருந்தார். இது பற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மோகன் கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் எனக்கூறி ஜாமின் வழங்கியது.
இந்த நிலையில் இன்று (செப்.,30) நடைபெற்ற ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, அப்போது, ''பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறாக கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழகம் முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும். பழநி போலீஸ் ஸ்டேஷனில் 3 வாரங்களுக்கு தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்தாமல் கூறக் கூடாது. இயக்குனர் மோகன், பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். உண்மையிலேயே பழநி கோயில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம்'' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.