சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் |
பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சினிமா இயக்குனர் மோகன்.ஜி கைது செய்யப்பட்டார்.
பிரபல சினிமா இயக்குனர் மோகன்.ஜி. பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், திரவுபதி, பகாசூரன் போன்ற படங்களை இயக்கியவர். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர். அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
சமீபத்தில் இவர் பழநி கோயிலில் வினியோகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்து கொடுப்பதாக கூறி இருந்தார். இது பற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்த அவரை, இன்று(செப்., 24) காலை போலீசார் கைது செய்தனர்.
சட்டத்திற்கு புறம்பான கைது
மோகன் ஜி கைது பற்றி தமிழக பா.ஜ.வை சேர்ந்த அஸ்வத்தாமன் வெளியிட்ட பதிவில், ‛‛சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி, தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது.