ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
அயோக்யா, வேலன், இரவின் நிழல், கருடன் மற்றும் இன்று திரைக்கு வந்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை என பல படங்களில் நடித்தவர் பிரிகிடா. அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை 30 வயது நிரம்பிய நடிகை என்று பலரும் கருதுவதாக ரொம்பவே பீல் பண்ணி உள்ளார். மேலும், பவி டீச்சர் வேடத்தில் நான் நடித்த போது எனக்கு 19 வயது தான். அப்போது கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்தேன். அதையடுத்து நான் நடித்த வேடமெல்லாம் மெச்சூரிட்டியாக இருந்ததால் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு நடித்ததால் அனைவருமே எனக்கு வயது அதிகம் இருக்கு என்று நினைக்கிறார்கள். இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தில் தான் என் வயதுக்கு ஏற்ற வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். இனி இதுபோன்று இளமையான வேடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார் பிரிகிடா.