Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் முதல் 'பான் இந்தியா' படம் 'கங்குவா' தான், ஏன்?

07 செப், 2024 - 03:56 IST
எழுத்தின் அளவு:
The-first-Pan-India-film-in-Tamil-was-Kanguva


'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் 'பான் இந்தியா' என்ற வார்த்தை திரையுலகிலும் ரசிகர்களிடத்திலும் அதிகம் பரவியது. ஆனால், தமிழில் இதுவரை முழுமையான ஒரு பான் இந்தியா படம் வெளியாகவில்லை. 'கங்குவா' தான் அப்படியான சாதனையை ஏற்படுத்தப் போகும் முதல் படம் என்கிறார்கள்.

பான் இந்தியா என்பது முழுமையான விதத்தில் வெளியாக வேண்டும். தமிழில் இதுவரை பான் இந்தியா என்று சொல்லப்பட்ட படங்கள் ஹிந்தியில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகவேயில்லை. அதற்குக் காரணம் ஓடிடி வியாபார உரிமை. வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கத்தினர் தியேட்டர்களில் ஒரு படம் வெளியான எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும். அதற்குக் குறைவான வாரங்களில் வெளியிட ஒப்பந்தம் செய்தால் அந்தப் படங்களை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் திரையிட அனுமதிப்பதில்லை.

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் முழுமையாக வெளியிடப்படாத காரணத்தால்தான் தமிழ்ப் படங்கள் பலவும் வட இந்தியாவில் வசூலைக் குவிக்க முடிவதில்லை. தெலுங்கில் தயாராகும் படங்கள் அந்த எட்டு வார இடைவெளிக்கு சம்மதித்து படங்களை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் வெளியிட வைத்து அதிக வசூலைக் குவிக்கிறார்கள்.

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள 'கங்குவா' படத்தை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியிடும் விதத்தில் எட்டு வார இடைவெளியில்தான் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு அப்படம் ஓடிடியில் வெளியாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். இத்தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தைச் சேர்ந்த சிஇஓ தனஞ்செயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே 'கங்குவா' படம் ஒரிஜனல் பான் இந்தியா படமாக வெளியாகி அதிக வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்'சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்த காவல்துறை! விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)