போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் சிறப்பாக நடனம் ஆடுபவர் எனப் பெயரெடுத்தவர் விஜய். அவரது நடனத்தால் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்கள் என பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம். விஜய்யின் நடனத்தை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அலமதி ஹபிபோ' பாடல். அந்தப் பாடலின் நடனத்தை தெலுங்கில் 'தேவரா 1' படத்தின் பாடலான 'தாவூதி' பாடலில் காப்பியடித்துள்ளதாக தெலுங்கு ரசிகர்களே 'டிரோல்' செய்து வருகிறார்கள். நடனத்தை மட்டுமல்ல அனிருத் அவருடைய டியூனை அவரே காப்பியடித்து விட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு இந்தப் பாடலுக்கு வந்துள்ளது.
'அரபிக்குத்து' பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். 'தாவூதி' பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இவர்தான் இன்று வெளியாகியுள்ள 'தி கோட்' படத்தில் 'மட்ட' பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.