மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் |
அண்ணா சீரியலில் அடுத்தடுத்து என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்திய எபிசோடுகளில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் மக்களை கவர்ந்து வரும் இந்த தொடரில் வருகிற ஞாயிற்றுகிழமை சிறப்பு எபிசோடு ஒன்று ஒளிபர்பபாக உள்ளது. இந்த எபிசோடில் மக்கள் மனதில் இடம் பிடித்த சில பிரபலங்கள் என்ட்ரி கொடுக்க உள்ளனர். அயலி வெப் தொடர் மற்றும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து கலக்கிய காயத்ரி அப்பத்தாவாக அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்த பார்வதி, டபுள் ஆக்ஷனில் சரவணன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் செந்திலுக்கு ஜோடியாக கோப்பெருந்தேவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் சண்டே ஸ்பெஷல் எபிசோடு மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.