அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, ஒருவரை நான் தான் வளர்த்து விட்டேன் என்னால்தான் அவர் வளர்ந்தார் என யாரும் ஒருவர் வளர்ச்சியின் மீது முத்திரை குத்த முடியாது என்று சூரிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது பற்றி பேசினார். ஆனாலும் அவர் பேசியது நடிகர் தனுஷ் குறித்து தான் என்று சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை கிளம்பியது.
காரணம் தனுஷ் தான், சிவகார்த்திகேயனை தனது 3 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு எதிர்நீச்சல், காக்கிச்சட்டை என தான் தயாரித்த படங்களின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கமர்சியல் அந்தஸ்து கிடைப்பதற்கு காரணமாகவும் அமைந்தார். பல இடங்களில் சிவகார்த்திகேயனும் தனுஷ் பற்றி உயர்வாக பேசி வந்த நிலையில் அவர் இப்படி பேசியது தான் சர்ச்சையை கிளப்பியது. தான் ரொம்பவே வளர்ந்து விட்டதால் தனது வளர்ச்சிக்கு திறமை தான் காரணம் என்றும் மற்றவர்கள் அல்ல என்பது போன்றும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார் என்று பலரும் விமர்சித்து வந்தார்கள்.
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்று தனுஷ் சிவகார்த்திகேயன் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதுடன் இருவரும் அருகருகே நின்று அந்த நிகழ்ச்சியை கவனிக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருந்த சர்ச்சைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.