Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரம்மயுகம் படத்திற்கு சொந்தமானவற்றை வணிக ரீதியாக பயன்படுத்த தடை

25 ஆக, 2024 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Prohibition-on-commercial-use-of-Bramayugam-film-properties


நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மயுகம் என்கிற படம் வெளியானது. ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கிய இந்த படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது. 17ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக மாந்திரீக பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. மேலும் மம்முட்டி இந்த படத்தில் 80 வயதான பழமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிரம்மயுகம் படத்தின் டைட்டில், லோகோ, இசை, வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடைவிதித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதே சமயம் சோசியல் மீடியாக்களில், வலைதளங்களில் இந்தப் படம் சம்பந்தப்பட்டவற்றை பயன்படுத்தி புதிதாக ஏதேனும் சொந்த படைப்புகளை உருவாக்க விரும்புபவர்கள் தங்களிடமிருந்து முறையான அனுமதியை பெற்று அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதியின்றி பயன்படுத்துபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புகார் கொடுத்தால் இயக்குனர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ; அமைச்சர் நழுவல் பதில்புகார் கொடுத்தால் இயக்குனர் ரஞ்சித் ... போதை வழக்கில் சிக்கிய ஹேமா மீதான தடை நீக்கம் போதை வழக்கில் சிக்கிய ஹேமா மீதான தடை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)