இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தெலுங்கு சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகை ஹேமா. தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ்மகன், சத்யம், சாகசம், தேவி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு ரெசார்ட்சில் போதை பார்ட்டி நடப்பதாக போலீசுக்கு வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் போதை மருந்து உட்கொண்டதாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் சில தெலுங்கு, மற்றும் கன்னட சினிமாவின் துணை நடிகர், நடிகைகளும் இருந்தனர்.
இந்த போதை விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் தெலுங்கு நடிகை ஹேமா என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஹேமா தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர் படங்களில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான ஹேமா நான் எந்த போதை விருந்தையும் ஏற்பாடு செய்யவில்லை. போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் தனக்கு இல்லை. தெலுங்கு நடிகர் சங்கம் சரியாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் தனக்கு தடை விதித்திருப்பதாக கூறினார். அதோடு இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதினார். அத்துடன் போதை மருந்து அருந்தவில்லை என்ற மருத்துவ சான்றிதழையும் அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய ஆதாரங்களை பரிசீலனை செய்த தெலுங்கு நடிகர் சங்க செயற்குழு ஹேமா மீது விதித்து இருந்த தடையை நீக்குவதாக அறிவித்தது.