லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழக அரசுடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த வருடத்துக்கான, 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது.
இதில், போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும் பல்வேறு இந்திய மொழிகளிலிருந்து 12 முதல் 15 படங்களும், உலக சினிமா போட்டிப் பிரிவில் 10 படங்களும், போட்டியில்லாத பிரிவில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் உள்ளிட்ட சர்வதேச விழாக்களில் பங்கேற்ற படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
போட்டிப் பிரிவுக்கான தமிழ்ப் படங்களை விழாக்குழு வரவேற்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். “சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுக்கு https://chennaifilmfest.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 2023ம் ஆண்டு அக்டோபர் 16 முதல் இந்த வருடம் அக்டோவர் 15 வரை சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 2ம் தேதி. இதில் பங்கேற்பதற்கான நுழைவு சீட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து பெறவேண்டும்” என தெரிவித்துள்ளது.