ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
'பாகுபலி' படத்திற்குப் பின்பு பான் இந்தியா நடிகராக உயர்ந்தார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதற்குப் பின் அவர் நடிப்பில் சில படங்கள் வந்தாலும் அவை பெரிய வெற்றியையும், வசூலையும் குவிக்கவில்லை. ஆனால், சில வாரங்கள் முன்பு வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தது. அப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டியது.
இந்நிலையில் ஹிந்தி நடிகரான அர்ஷத் வர்ஷி சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸை 'ஜோக்கர்' எனக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “கல்கி 2898 ஏடி படம் எனக்குப் பிடிக்கவில்லை. அமிதாப்ஜி நம்பமுடியாமல் இருந்தார். அவரை புரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் போன்ற சக்தி என்னிடம் இருந்தால் நமது உயிர் போய்விடும். அவரது கதாபாத்திரம் உண்மையாக இல்லை. பிரபாஸ், நான் உண்மையில் வருந்துகிறேன். அவர் படத்தில் ஜோக்கர் போல இருந்தார். நான் 'மேட் மேக்ஸ்' பார்க்க விரும்பினேன், நான் மேல் கிப்சனை அங்கு பார்க்க விரும்பினேன். அவர் ஏன் இப்படிச் செய்தார் என்பது எனக்குப் புரியவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் பிரபாஸ் ரசிகர்களையும், தெலுங்கு திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதனால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. தனது கருத்துக்கு அர்ஷத் வர்ஷி வருத்தம் தெரிவிப்பாரா என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.