ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் 2022ம் ஆண்டில் வெளிவந்த 'காந்தாரா' கன்னடத் திரைப்படம் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. அப்படத்திற்கு நேற்று அறிவிக்கப்பட்ட 70வது தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த என்டெர்டெயின்மென்ட் படத்திற்கான விருது என இரண்டு விருதுகள் கிடைத்தது.
தேசிய விருதுகளுக்கான அறிவிப்புகள் வந்த பிறகு நேற்று பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ரிஷப் ஷெட்டி. தேசிய விருதுகளை மறைந்த கன்னடர் நடிகர் புனித் ராஜ்குமார், தெய்வீகம் மற்றும் தெய்வ நர்த்தகாஸ், கன்னட ரசிகர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார். தெய்வத்தின் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நடனக் கலைஞர்களை தெய்வ நர்த்தகாஸ் என அழைக்கிறார்கள்.
மேலும் அவர் பேசுகையில், “ஆரம்பத்திலிருந்தே இந்த விருதுகளை நான் புனித் ராஜ்குமார், கன்னட மக்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிப்பதாக சொல்லி வந்தேன். ஹொம்பலே பிலிம்ஸ், காந்தாரா குழுவினர் ஆகியோருக்கும் நன்றி. ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. தேசிய விருதுகள் அறிவிப்பை பார்த்துக் கொண்டிருந்த போது, எனக்கான விருது அறிவிக்கப்பட்ட போது சிலிர்ப்பாக உணர்ந்தேன்.
கன்னடத் திரையுலகம் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த விருதுகள் இன்று கிடைத்துள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர், காஸ்ட்டியும் டிசைனராகப் பணி புரிந்த எனது மனைவி பிரகதி ஷெட்டி ஆகியோர் இந்த வெற்றிக்கு காரணமானவர்கள். அஜனீஷ் லோகநாத்தின் இசை மிகவும் முக்கியமானது. அனைத்து நடிகர்கள், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு நன்றி.
மக்கள் படத்தை ரசிக்கும் போது நமக்கான பொறுப்பும் அதிகமாகிறது. விருதுகள் வரும் போது அந்தப் பொறுப்பு இன்னும் அதிகமாகிறது. விருது அறிவிப்பு வந்தவுடன் எனது மனைவிதான் முதலில் என்னை வாழ்த்தினா, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. 'கேஜிஎப்' யஷ் உடனே போன் செய்து வாழ்த்தினார். எனது மகள் பிறந்த போது எல்லோரும் அவளை மகாலட்சுமி என்று சொன்னார்கள். தற்போது வரமகாலட்சுமி விழா நாட்கள் என்பதால் அந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாகி உள்ளது,” என்று தனது மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்.