நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... |

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற இதுவரை ரஜினியுடன் இணைந்து நடித்திராத நட்சத்திரங்கள் அவருடன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக சார்பட்டா பரம்பரை படம் மூலம் அறிமுகமான நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் வெளியான தனுஷின் ராயன், விக்ரமின் வீர தீர சூரன் மற்றும் வேட்டையன் என மிகப் பெரிய படங்களில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.
அந்த வகையில் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா விஜயன். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் தனக்கான டப்பிங் பேசும் பணியை துவங்கியுள்ளார் துஷாரா. சமீபத்தில் வெளியான ராயன் படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் வரவேற்பு பெற்ற நிலையில் வேட்டையன் திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.