விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
ஓடிடிக்கு புதிய படங்களை விற்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு பக்கம் முடிவு செய்துள்ளது. அது சம்பந்தமான அறிக்கை ஒன்றும் கடந்த வாரம் வெளியானது. இதனிடையே, ஓடிடி உரிமையை வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் புதிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச நிறுவனங்களான அமேசான், நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள்தான் நல்ல விலை கொடுத்து புதிய படங்களை வாங்குகின்றன. ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களின் உரிமைகளைப் பெற்று அவற்றை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து இந்திய அளவில் சினிமா ரசிகர்கள் பார்க்கும் விதத்தில் வெளியிடுகிறார்கள். சில படங்களை ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களுக்கும் சென்று சேர்க்கிறார்கள்.
வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் நிறுவனங்கள் அதற்குள்ளாகவே படங்களின் உரிமைகளை வாங்கி முடிக்கின்றன. கடந்த வருடம் வரை வெளியீட்டிற்கு முன்பாகவே படங்களை வாங்கினார்கள். ஆனால், அவற்றில் சில படங்கள் தியேட்டர்களில் வெளியாகி தோல்வியை சந்தித்தன. அதனால், அப்படி வாங்கிய படங்களால் ஓடிடி நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்ய இந்த 2024ம் ஆண்டில் குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களை மட்டுமே வாங்கினார்கள்.
அதன் காரணமாக நிறைய படங்களின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் அப்படியே கிடக்கிறது. இது தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் ஓடி வெற்றி பெற்றால் மட்டுமே அப்படங்களுக்கு நல்ல விலையைக் கொடுத்து வாங்கலாம். ஓடாத படங்களுக்கான விலையில் மாற்றத்தைக் கொண்டு வரும் விதத்தில் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.
தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பே ஒப்பந்தம் போட்டாலும், தியேட்டர் வெளியீட்டிற்கு பின்புதான் அந்தப் படத்திற்காக எவ்வளவு தொகையைத் தர முடியும் என மாற்றத்தைச் செய்துள்ளார்களாம். படம் ஓடினால் ஒரு தொகை, ஓடவில்லை என்றால் அதிலிருந்து குறைக்கப்பட்ட தொகை என்கிறார்கள்.
ஓடிடி உரிமை இவ்வளவு கிடைக்கும் என பட்ஜெட் போட்டு படத்தை ஆரம்பிக்க முடியாத சூழ்நிலையில் பல படங்கள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.