பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் மிஷன் : சாப்டர் 1. ஒரு உளவாளியின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கன்னட நடிகராக பரத் போபண்ணா. கன்னடத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகரான இவர் தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள இளம் நடிகர்களான லியோ புகழ் மேத்யூ தாமஸ், பிரேமலு புகழ் சங்கீத் பிரதாப் மற்றும் அர்ஜூன் அசோகன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் ப்ரொமான்ஸ் என்கிற படத்தில் இவர் வில்லனாக நடித்து வருகிறார்.
அருண் ஜோஸ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். மலையாள படத்தில் நடிப்பது குறித்து பரத் போபண்ணா கூறும்போது, “மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் போன்ற படங்கள் மொழிகளையும் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. மலையாள திரையுலகம் தற்போது முழு வீச்சில் இயங்கி வருகிறது. இதுதான் மலையாளத்தில் நுழைவதற்கு சரியான சமயம்” என்று கூறியுள்ளார்.