கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நாயகன் படத்திற்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமலும், மணிரத்னமும் இணைந்திருக்கும் ‛தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால், தக்லைப் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் இந்த தக்லைப் படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே இதே பொங்கல் தினத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 23வது படமும் திரைக்கு வர இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் கமலின் தக்லைப் படமும் இணைந்திருக்கிறது.