பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு |
நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி இருவரும் அண்ணன், தம்பி ஆக இருந்தாலும் இருவருமே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். ஆனால், இருவருமே இதுவரை எந்த படங்களிலும் இணைந்து நீண்ட வேடத்தில் நடித்ததில்லை. கடைகுட்டி சிங்கம் படத்தில் மட்டும் சூர்யா சிறப்பு ரோலில் வந்து போனார். பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட கார்த்தி, சூர்யா என இருவரிடமும் எப்போது சேர்ந்து நடிப்பீர்கள் என்ற கேள்வி அடிக்கடி எழும். நல்ல கதை அமைந்தால் இணைந்து நடிப்போம் என பல சமயங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதற்கான சந்தர்ப்பம் இப்போது அமைந்தது போன்று தெரிகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிமுக காட்சியை அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரமாக கார்த்தியை அறிமுகம் செய்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.