நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தில் கடந்த சில வருடங்களாகவே அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்களும், தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க சில நடிகர்களும் அவ்வப்போது முயற்சி செய்வது வழக்கம்.
ஆனாலும், படத்தின் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கும் பழக்கமுள்ளவர் நயன்தாரா. பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். ரஜினி, விஜய், அஜித் என டாப் நடிகர்களுடன் மட்டுமல்லாது அடுத்த கட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளார் நயன்தாரா. அப்படித்தான் அட்லீ இயக்குனராக அறிமுகமாகிய 'ராஜா ராணி' படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்க சம்மதித்தார். பத்து வருடங்களுக்கு முன்பு ஜெய் ஜோடியாக நயன்தாராவா என்று திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது.
அது போன்றதொரு அதிர்ச்சி தற்போது மீண்டும் வந்துள்ளது. வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் கவினுடன் நயன்தாரா ஜோடி சேர்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வந்ததிலிருந்து ரசிகர்களும் சேர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
விஷ்ணு எடவன் இயக்கும் இப்படத்தில் தன்னை விட வயது அதிகமான நயன்தாராவை கவின் காதலிப்பதுதான் கதை என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். தான் இயக்கும் முதல் படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து 'நன்றி அரோகரா' என ஆரம்பித்து நயன்தாரா, கவின், தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஷ்ணு.