பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பிரபாஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு 'ஸ்பிரிட்' என தலைப்பு வைத்துள்ளதாக சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்திருந்தார். இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். முழுக்க முழுக்க ஆக் ஷன் கதையில் தயாராகிறது. பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இதன் பட்ஜெட் மட்டும் ரூ. 300 கோடி என கூறப்படுகிறது.
இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பை வருகின்ற இவ்வருட டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




