2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் |
இந்தியத் திரையுலகத்தில் ரூ.1000 கோடி வசூல் என்பது கடந்த சில வருடங்களில் குறிப்பிடும்படி நடந்துள்ளது. 'பதான், ஜவான்' ஆகிய ஹிந்திப் படங்களும், 'கேஜிஎப்' கன்னடப் படமும், 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படமும் அந்த சாதனைகளை இதற்கு முன்பு படைத்தன. அவற்றிற்கும் முன்பாக ஹிந்தியில் 'தங்கல்' படமும், தெலுங்கில் 'பாகுபலி 2' படமும் 1000 கோடி வசூலை அள்ளி புதிய சாதனையைப் படைத்தன.
தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப், கமல், தீபிகா படுகோனே நடித்து வெளியான 'கல்கி 2898 ஏடி' படம் ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கில் இத்தகைய சாதனையைப் படைக்கும் 3வது படம். இரண்டு வாரங்களில் இவ்வளவு கோடியை வசூலித்துள்ளது இந்தப் படம்.
'பாகுபலி 2' படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த படங்கள் லாபகரமான வசூலைக் கொடுக்க தடுமாறிய நிலையில் இந்தப் படம் அத்தகைய சாதனையைப் படைத்து அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்துள்ளது.