பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு |
“நாய் சேகர், யுகி, ஜிகிரி தோஸ்த்' படங்களில் நடித்தவர், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை பவித்ரா லட்சுமி. அவரது இன்ஸ்டா தளத்தில் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிடுவார்.
கடந்த ஏப்ரல் மாதம் புல்லட் பைக் ஒன்றை மூன்றே நாட்களில் ஓட்டக் கற்றுக் கொண்டேன் எனப் பதிவிட்டு தோழி ஒருவருடன் புல்லட்டை ஓட்டிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்து இருந்தார். அந்தப் பதிவில், “நான் பயிற்சியின் போதும், ஓட்டும் போதும் ஹெல்மெட் அணிந்துதான் ஓட்டினேன். இந்த வீடியோவிற்காக பத்து நிமிடங்கள் மட்டுமே ஹெல்மெட் இன்றி ஓட்டினேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோவைத் தற்போது பகிர்ந்த ஒருவர், ““இந்த ஹீரோயின் எல்லாம் ஹெல்ட் இல்லாம பெசன்ட் நகர்ல பைக் ஓட்டி வீடியோ போட்டா கண்டுக்க மாட்டிங்களா” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சென்னை டிராபிக் போலீஸ், “இந்த வீடியோ சம்பந்தமாக ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பைக் ஓட்டியவருக்கும், பின்னால் அமர்ந்திருந்தவருக்கும் ஹெல்மெட் அணியாததற்காக 2000 ரூபாய் அபராதம் ஏப்ரல் மாதமே விதிக்கப்பட்ட பதிவையும் பகிர்ந்துள்ளார்கள்.
பைக், கார் ஓட்டி ரீல்ஸ் வீடியோ போடுபவர்களுக்கு இந்த அபராதப் பதிவு ஒரு உதாரணம். அதனால், விதிகளை கடைபிடியுங்கள் என சொல்லிக் கொள்கிறோம்.